• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தரமுல்லையிலுள்ள காணித் துண்டொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குதல்
- சுதந்திர சதுக்க மனையிடத்தில் பேணப்பட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான அலுவலகம் உள்ள காணி அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தி நோக்கங்களுக்காக உடைமையாக்கிக் கொண்டதன் காரணமாக அதற்குப் பதிலாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள சுமார் 1 1/2 ஏக்கர் விஸ்தீரணமான காணித் துண்டை குத்தகை அடிப்படையில் 50 வருடகாலத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.