• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பச்சை தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80/= ரூபாவைக் கொண்ட உத்தரவாத விலையொன்றைப் பேணுதல்
- அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் பச்சை தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80/= ரூபாவைக் கொண்ட உத்தரவாத விலையொன்றை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, அதனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.