• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தேசிய தரவு நிலையமொன்றைத் தாபித்தல்
- ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், தேர்தல் திணைக்களம், தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம் போன்ற பொது மக்களுக்கு மிக நெருக்கமாக சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெவ்வேறாக பாரியளவில் தரவுகளை பேணி வருகின்றதோடு, அதற்காக கணிசமான செலவுகளையும் ஏற்கின்றன. அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேலும் தன்னியக்கப்படுத்தல் உட்பட E-சேவைகளைத் தாபித்தல் என்பன மூலம் பிரசைகளுக்கு கூடுதலான வசதிகளுடன் சேவைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் அரசாங்க நிறுவனங்களினால் வெவ்வேறாக பேணப்பட்டு வரும் சகல தரவுகளையும் ஒரு நிலையத்தில் பாதுகாப்பாக பேணுவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை தகவல், தொலைத்தொடர்பாடல் முகவராண்மையின் கையாள்கையின் மீது செயற்படுத்தப்படும் தேசிய தரவு நிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.