• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Gyrinops Walla தாவர இனத்தின் ஏற்றுமதியை ஒழுங்குறுத்துதல்
- அழிந்துபோகும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ள தாவரமொன்றாக 2012 தேசிய சிவப்பு தரவு அட்டவணையின் மூலம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள Gyrinops Walla தாவர இனத்தை பாதுகாக்கும் பொருட்டுத் தேவையான நடவடிக்கைகள் கடுமையாக அமுல்படுத்தப்படுவதோடு, வர்த்தக நோக்கங்களுக்காக செய்கை பண்ணப்படும் இந்த தாவரம் இயைபுள்ள அதிகாரபீடங்களினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரமொன்றின் மீது உடைமையில் வைத்திருப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்குவது சம்பந்தமாக உரிய தரப்பினர்களான வனப் பாதுக்காப்புத் திணைக்களம், வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களம், உயிரினப் பல்வகைமை செயலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களினது உடன்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட வழிமுறையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.