• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - 2015 (செப்ரெம்பர் மாத வழங்குகை)

- உர மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மானிய விலையின் கீழ் கமக்காரர்களுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி (லக் பொஹர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி (கொமர்ஷல் ​பொஹர) ஆகியவற்றினால் நிறைவேற்றப்படுகின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசுகளுக்கு அமைவாக 2015 செப்டம்பர் மாத வழங்குகைக்காக உர விநியோகத்திற்குரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.