• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லங்கா சதொச நிறுவனத்தை மீளமைத்தல்

- லங்கா சதொச நிறுவனம் வெகு காலமாக குறைவான செயற்பாடுடன் இயங்குகின்றது. தொழிற்பாட்டு குறைபாடுகள் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் காணப்படும் குறைபாடுகள் இந்த கஷ்டமான நிலைமைக்கு ஏதுவாய் அமைந்துள்ள பிரதான காரணங்களாகும். 2014 ஆம் ஆண்டின் இறுதியில் மிக பாரிய அளவில் சதொச நிறுவனத்தின் ஊடாக கூடிய விலையில் அரிசி இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்றமையினாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கியமையினாலும் சதொச நிறுவனத்திற்கு சுமார் 5.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் தற்போது சதொச நிறுவனம் முகங்கொடுத்துள்ள பிரதிகூலமான நிதி கஷ்ட நிலை பற்றியும் அடுத்தது அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு தனியார் துறையுடன் போட்டியிட்டு சதொச நிறுவனத்தினால் நிறைவேற்றப்படும் பணியையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சதொச நிறுவனத்தை மீளமைப் பதன்பால் அரசாங்கத்தின் முன்னுரிமை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது சதொச களஞ்சியங்களில் மேலதிகமாகவுள்ள அரிசியை நடைமுறைச் சந்தைவிலைக்கு திறந்த கேள்விமூலம் விற்பனை செய்து இந்த வருமானத்தை அரிசி இறக்குமதி செய்யும் பொருட்டு அரச வங்கிகளின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட 9.9 பில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் நிலுவையை தீர்வு செய்யும் பொருட்டும் 4 பில்லியன் கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதன் சார்பில் கடன் வசதி கடிதமொன்றை பொதுத்திறைசேரியினால் அரச வங்கியொன்றுக்கு வழங்குவதன் மூலம் சதொச மீளமைப்பு பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்குமாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினாலும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.