• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய போதைப் பொருள் தடுப்பு கொள்கையையும் செயற்திட்டத்தையும் அறிமுகப்படுத்துதல்

- இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அவர்களின் வருமானத்திலிருந்து 1/3 ஐ புகை மற்றும் மதுசாரத்திற்காக செலவு செய்கின்றனரென்பதுவும் இலவச சுகாதார சேவைக்காக அரசாங்கம் வகிக்கும் செலவிலிருந்து 22 சதவீத்திற்கு மேலான அளவு புகை மற்றும் மதுசார பாவனை காரணமாக நோய்வாய்ப்படுவோர்களுக்காக சார்பில் செலவு செய்யப்படுகின்றதென்பதுவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் நோக்கில் புகை, மதுசாரம் உட்பட சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை முறையாக குறைக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று போதைப்பொருள் தடுப்புக்கான சனாதிபதி செயலணியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, இதன்பால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 2015 யூலை மாதம் 09 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை "தேசிய போதைப்பொருள் தடுப்பு மாதம்" ஆக பிரகடனப்படுத்தி தேசிய போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய போதைப் பொருள் தடுப்பு கொள்கையையும் செயற்திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கும் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பகுதி அரச நிறுவனங்கள் என்பனவற்றின் ஊடாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.