• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் கட்டத்தின் பல்பணி முனைவிடத்தில் Ro-Ro தொழிற்பாடு சார்பில் கூட்டு தொழில்முயற்சி யொன்றுக்கு அபிப்பிராய வெளிப்படுத்தல் கடிதங்களைக் கோரல்

- இலங்கைக்கு அருகாமையில் வாகனங்களை கப்பல் ஏற்றும் பிரதான இரண்டு மையநிலையங்களாக தற்போது இயங்கி வரும் சிங்கபூர் மற்றும் துபாய் கப்பல் பாதையின் நடுவில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கப்பல்களுக்கு கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கும் மற்றைய பக்கதில் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு நேரடியாக செல்லலாம். ஆதலால், வாகனங்களை உற்பத்தி செய்து, கொண்டு செல்லுபவர்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் கப்பல்களை நங்கூரமிடுவதற்கு பொருத்தமானவாறு சீர்செய்து தொழிற்பாட்டு மற்றும் முகாமைத்துவ பணிகள் மேற்கொள்ளப்படுமாயின் அம்பாந்தோட்டை துறைமுகம் மீள் கப்பல் ஏற்றலுக்கான மையநிலையமொன்றாக மேம்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளமை பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு Ro-Ro கப்பல் / முனைவிட தொழிற்பாட்டாளர் ஒருவருடன் கூட்டு வர்த்தகமொன்றாக அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் கட்டத்தின் பல்பணி முனைவிடத்தின் தொழிற்பாட்டின் பொருட்டு ஊக்கமுள்ள தரப்பிரனர்களிடமிருந்து அபிப்பிராய மற்றும் வர்த்தக பிரேரிப்புகளை கோருவதற்கும் வெற்றிகரமான பிரேரிப்புகளை பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.