• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிழக்கு கொள்கலன் அந்தலையின் அபிவிருத்தியும் மாற்று தொழிற்பாடும்

- கொழும்பு துறைமுக விரிவுபடுத்தல் கருத்திட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளுகை அளவை அதிகரிப்பதற்கும் அதன் மூலம் வலயத்திலுள்ள துறைமுகங்களுடன் போட்டியிட்டு பயன்மிக்க நிலைமையினை பெற்றுக் கொள்வதற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 450 மீற்றர் நீளமான கப்பற்றுறை மதிலின் சிவில் நிருமாணிப்பு உட்பட தேவையான கந்தலை வசதிகளை நிருமாணிக்கும் பணிகள் தற்போது முடிவுறும் மட்டத்திலுள்ளன. சரியான சாத்தியத் தகவாய்வொன்றைச் செய்ததன் பின்னர், இதன் கையாளுகைப் பணிகளை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 51 சதவீதமான உரிமையுடன் கப்பல் கம்பனி ஒன்றுடனோ அல்லது தனியார் கொள்கலன் செயற்பாட்டாளர் ஒருவருடனோ கூட்டுத் தொழில் முயற்சியொன்றாக செய்யும் பொருட்டு ஊக்கமுள்ள தரப்பினரிடமிருந்து அபிப்பிராயங்களையும் வர்த்தக பிரேரிப்புகளையும் கோருவதற்கும் வெற்றிகரமான பிரேரிப்புகளை பரிசீலனை செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.