• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர புகையிரத முறைமையை மின்சாரமயப்படுத்தல்

- நகர புகையிரத முறைமைகளை ஆரம்பித்து நடைமுறையிலுள்ள உலக தரங்களுக்கு ஏற்றவாறு வினைத்திறன் மிக்க புகையிரத சேவையொன்றை தாபிக்கும் நடுத்தவணைக்கால நோக்குடன் கொழும்பு நகர புகையிரத சேவையை மின்சாரமயப்படுத்துவதற்கு கொள்கையளவில் முன்னுரிமை வழங்குவதற்கும் இலங்கை பொறியியல் நிறுவனம், இலங்கை மின்சார சபை, இலங்கை புகையிரதத் திணைக்களம் என்பன கூட்டாக மேற்கொண்ட ஆரம்ப சாத்தியத் தகவாய்வினை அடிப்படையாகக் கொண்டு பாணந்துறை - வேயங்கொடை இடையிலான புகையிரத முறைமையை மின்சாரமயப்படுத்துவதற்குரிய விரிவான சாத்தியத் தகவாய் வொன்றை செய்வதற்கும் இந்த ஆய்வு அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ள கொள்கை கட்டமைப்பிற்குள் புகையிரத மின்சாரமயமாக்கல் திறமுறை மற்றும் கருத்திட்டங்களை தீர்மானிப்பதற்கும் வெளித்தெரியும் போட்டி வழிமுறையொன்றின் மூலம் ஊழல் மற்றும் வீண் விரயத்தை தடுக்கும் விதத்தில் ஆகக்கூடுதலான மூலதன பயனுடன் இந்த பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் முகமாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.