• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் ஈராக் அரசாங்கத்திற்கும் இடையில் சுற்றுலாத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இருநாடுகளினதும் மக்களுக்கிடையில் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நல்லெண்ணத்தை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் பரஸ்பர புரிந்துணர்வினை பலப்படுத்தும் முக்கிய துறையொன்றாக சுற்றுலாத் துறையை இனங்கண்டு இருநாடுகளுக்குமிடையில் சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பினை பலப்படுத்திக் கொள்ளும் மேம்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும் ஈராக் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.