• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் நவீன வசதிகளுடனான புற்றுநோய் வைத்தியசாலையை நிருமாணித்தல்

- மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனம் இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை சேவையை வழங்கும் முக்கிய நிலையமாகும். இங்கு சிகிச்சை பெறுவதற்காக அதிகரித்துவரும் கேள்வியை ஈடு செய்யும் பொருட்டு மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனத்தை நவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றாக மாற்றும் பொருட்டிலான கருத்திட்டமொன்று வரையறுக்கப்பட்ட லண்டன் அகமட் தேயிலை கம்பனியிடமிருந்து ஆரம்பத்தில் கிடைத்த 850 மில்லியன் ரூபாவும் அதன் பின்னர் வழங்கப்பட்ட 380 மில்லியன் ரூபாவும் கொண்ட பங்களிப்பின் மீது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, இதற்கு மேலதிகமாக சத்திரசிகிச்சை கூடமொன்றுடன் எலும்பு மச்சை பரிசோதனை பிரிவொன்றை நிருமாணித்தல், இரசாயன சிகிச்சைப் பிரிவின் மேலதிக வசதிகளை ஏற்படுத்துதல், எலும்பு மச்சை மாற்று சிகிச்சை வசதிகள் உட்பட அத்தியாவசிய உபகரணங்களை வழங்குதல் போன்ற பணிகளும் கூட மேற்கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தேவைப்படும் மீதித் தொகையான 233 மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.