• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெதர்லாந்து உதவியின் கீழ் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலை வசதிகளை வழங்குதல்

- களுத்துறை வைத்தியசாலையை விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் சுகாதார பாதுகாப்பு வைத்தியசாலையொன்றாக மேம்படுத்துவதன் மூலம் இந்த வைத்தியசாலையில் சேவையைப் பெறும் குறைந்த சுகாதார வசதிகளுடன் கூடிய மத்துகம, அகலவத்தை, தொடங்கொடை, இங்கிரிய, புளத்சிங்கள, ஹொரண, பேருவளை, பலபிட்டிய பிரதேச மக்களுக்கு உயர் சுகாதார சேவை வசதிகளை வழங்க முடியுமென்பதனை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 28,782,948.30 யூரோக்களைக் கொண்ட நெதர்லாந்து உதவியின் கீழ் களுத்துறை பொது வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் சிறுவர் சுகாதார பாதுகாப்பு நிலையமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.