• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Glyphosate களைக்கொல்லி இறக்குமதி மற்றும் பாவனையை தடைசெய்யும் பொருட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமனத்தில் சமர்ப்பித்தல்

- 2015‑05‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் Glyphosate களைக்கொல்லி இறக்குமதியை தடை செய்வதற்காக ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் 2015‑06‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 1918/22 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.