• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை தொழிற் சாலைகளுக்கான மூலதன கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்

- உலக சந்தையில் நிலவும் பிரச்சினையான நிலைமை காரணமாக தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டுள்ளமையினால், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் நிதிசார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளதன் விளைவாக தொழிற்சாலை களை நடாத்திச் செல்வதற்குத் தேவையான தொழிற்பாட்டு மூலதன தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கமைவாக, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் அனைவருக்குமாக இந்த கடன் திட்டம் அரசாங்க மற்றும் வர்த்தக வங்கிகளின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த கடன் தொகை சார்பில் 2 சதவீத வருடாந்த வட்டி சலுகையொன்றை பொதுத் திறைசேரியினால் இரண்டு (02) வருட காலத்திற்கு உரிய நிதி நிறுவனத்திற்கு வழங்குவதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.