• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துரிதமாக செயற்படும் பிணியாளர் வண்டியில் மருத்துவ பாதுகாப்பு வசதி

- ஏதேனும் விபத்தொன்றுக்கு, அனர்த்தமொன்றுக்கு அல்லது அவசர நிலைமைக்கு ஆளான ஒருவரின் உயிரை பாதுகாத்தல், மேலும் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்த்தல், விரைவில் குணமடையச் செய்வித்தல் போ்னறவற்றுக்காக அத்தகைய நிகழ்வொன்றின் பின்னர், முதல் 30 வினாடிகளுக்குள் கிடைக்கும் மருத்துவ பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். அத்தகைய அவசர பிணியாளர் வண்டி மருத்துவ பாதுகாப்பு சேவைக்யொன்று ஏற்கனவே இந்தியாவில் வெற்றிகரமாக நடைமுறையிலுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவை மேலும் விருத்தி செய்து ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையிலுள்ள இந்த பிணியாளர் வண்டி சேவைக்கு சமமான சேவையினை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு அண்மையில் இந்தியாவின் மாண்புமிகு பிரதம அமை்சரின் இலங்கைக்கான விஜயத்தின் போது உடன்பாடு காணப்பட்டது. இதற்கமைவாக இலவச சுகாதார சேவையின் தரத்தினை மேலும் உயர்த்தி இத்தகையஇலாபம் ஈட்டாத சேவையொன்றை இலங்கையின் கிராமிய பிரதேசங்களையும் உள்வாங்கும் விதத்தில் 297 பிணியாளர் வண்டிகள் உட்பட 2,000 பயிற்சி பெற்ற பதவியணியுடன் நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டமானது மேல் மாகாணத்திலும் தெற்கு மாகாணத்திலும் 88 பிணியாளர் வண்டிகளை பயன்படுத்துவதன் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காகச் செலவிடப்படும் 8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை் கொண்ட தொகையை இந்திய அரசாங்கத்திடமிருந்து மானியமாக பெற்றுக் கொள்வதற்கும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்குரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.