• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனி லிமிடெட்டின் பிணைய வைப்பு உடமையாளர்களுக்கான உத்தேச மீள் கொடுப்பனவு பொறிமுறை

- 2015 இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வங்கியல்லாதும் செயற்பாடற்றுள்ளதுமான நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததோடு, இந்த விடயம் சம்பந்தமாக சில கலந்துரையாடல்கள் உரிய தரப்பினர்களின் பங்களிப்புடன் நிதி அமைச்சரினால் நடாத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக நிதி அமைச்சர் சமர்ப்பித்த பிரேரிப்பின் அடிப்படையில் Golden Key Credit Card Company Ltd கம்பனியில் 2 மில்லியன் ரூபா வரை உத்தரவாத வைப்புகளை பேணிய வைப்பாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கொடுப்பனவுகளைச் செய்வதற்கும் அதன் பின்னர், செலுத்தப்படவுள்ள மேலதிக நிதியை வழங்கும் பொருட்டு Golden Key Credit Card Company Ltd கம்பனியின் சொத்துக்களை பணமாக மாற்றுவதற்கும் நிதி வழங்குவதற்கு பொதுத் திறைசேரியுடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்வதற்குமாக கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.