• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு கொள்கலன் அந்தலைக்காக கொள்கலன் கையாள்கை பாரந்துதூக்கிகளைக் கொள்வனவு செய்தல்

- இலங்கை துறைமுக அதிகாரசபையின் 1,200 மீற்றர் நீளமான கிழக்கு கொள்கலன் அந்தலையின் முதலாவது 400 மீற்றர்களை நிருமாணிப்பதற்காக 80 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அதன் நிருமாணிப்பு பணிகள் பூர்த்தி அடைந்து வருகின்றன. இந்த கொள்கலன் அந்தலைக்குத் தேவைப்படும் 4 கொள்கலன் கையாள்கை பாரந்துதூக்கிகளையும் 12 கென்றி பாரந்துதூக்கிகளையும் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கொள்வனவு நடவடிக்கைமுறையைப் பின்பற்றி, சருவதேச போட்டிக் கேள்வி கோரும் அடிப்படையில் கொள்வனவு செய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.