• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் நிதியளிக்கப்படும் 25 பாலங்களை மீள நிருமாணிப்பதற்கான மேற்பார்வை மதியுரைச் சேவைகளை வழங்குதல்

- அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தினால் 25 பாலங்களை மீள நிருமாணிப்பதற்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழான நிருமாணிப்புகளின் மேற்பார்வை மதியுரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.