• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண வசுத்தரிப்பிட அபிவிருத்திக் கருத்திட்டம் - II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- ஹொரண நகரம் களுத்துறை மாவட்டத்தில் பிரதான சேவை மத்திய நிலையமாவதோடு, பிரதேசத்திலுள்ள வீதி வலையமைப்பின் மூலம் இது கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பிரதான நகரங்களுடன் இணைந்துள்ளன. ஹொரண நகரத்தின் வசு தரிப்பிட நிருமாணிப்பிற்கான II ஆம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை இலங்கை காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.