• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீரகெட்டிய ஜோர்ஜ் ராஜபக்‌ஷ விளையாட்டு மைதானத்தில் அரங்கமொன்றை நிருமாணித்தல்

- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 2014 ஆம் ஆண்டில் வீரகெட்டிய நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டது. இந்த நகர மத்தியிலுள்ள மேற்போந்த விளையாட்டு மைதானத்தில் அரங்கமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.