• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதி நிதிகளுக்கு வழிகாட்டல் கோவை யொன்றை அறிமுகப்படுத்துதல்

- நாட்டில் 23 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 271 பிரதேச சபைகளும் என 335 உள்ளூராட்சி நிறுவனங்கள் செயற்படுவதோடு, இந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 4,486 உறுப்பினர்கள் மக்கள் வாக்கினால் தெரிவுசெய்யப்படுகின்றனர். அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைவாக உள்ளூராட்சி நிறுவனங்களைச் சேர்ந்த 104 மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக பல்வேறுபட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் முறைபாடுகள் சம்பந்தமாக விசாரணைகள் நடாத்துவதற்கு அல்லது குற்றப்பத்திரங்களை வழங்குவதற்கு அல்லது நீதிமன்றம்சார் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சேவைக்கு அர்பணித்து, மக்களுடன் நெருங்கி நல்லாட்சிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும், குற்றம் மற்றும் ஊழல் அற்ற முன்மாதிரியான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் நோக்கில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள அத்துடன் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டல் கோவையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் மாகாண சபைகளின் கருத்துகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.