• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரவப்பால் லீற்றர் ஒன்றின் கொள்வனவு விலையை 60/= ரூபாவிலிருந்து 70/= ரூபா வரை அதிகரித்தல்

- 2015 இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் திரவப்பால் லீற்றர் ஒன்றின் கொள்வனவு விலையை 60/- ரூபாவிலிருந்து 70/= ரூபா வரை அதிகரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டது. இதற்கமைவாக, உரிய தரப்பினர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுடைய உடன்பாட்டுடன் பாலிலுள்ள கொழுப்பின் நூற்றுவீதம், கொழுப்பல்லாத திண்ம பொருட்களின் அளவு, அத்துடன் மொத்த திண்மப் பொருட்களின் நூற்றுவீதம் போன்ற காரணிகளின் மீது, தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.