• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட வேரஹர இன்ஜினியரிங் சேர்விசஸ் கம்பனி (வெஸ்கோ) மற்றும் வரையறுக்கப்பட்ட கஹகொல்ல இன்ஜினியரிங் சேர்விசஸ் கம்பனி (கெஸ்கோ) முதலிய நிறுவனங்களில் தொழில் இழந்துள்ள ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல்

- 2001 ஆம் ஆண்டில் றே்போந்த நிறுவனங்கள் மூடியதன் காரணமாக தொழில் இழந்த ஊழியர்களில் ஒரு பகுதியினர் அமய அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபையில் சேவைக்காக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழியர்களிலிருந்து ஒரு பகுதியினர் மாத்திரம் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள போதிலும் மேலும் ஒரு பகுதியினர் சேவையில் நிரந்தரமாக்கப்படவில்லை. அவ்வாறு சேவை நிரந்தரமாக்கப்படாத ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்கும் அவர்களுக்குரிய ஏனைய உரிமைகளை வழங்குவதற்குமாகு உள்ளக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.