• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தகம் சார்ந்த புலமைச் சொத்துக்கள் உரிமை பற்றிய உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கை" திருத்துவதற்கான வரைவு உடன்படிக்கைளை நடைமுறைப்படுத்துதல்

- உலக வர்த்க அமைப்பின் உறுப்பு நாடுகளினால் உடன்பட்டுள்ள வர்த்தகம் சார்ந்த புலமைச் சொத்துக்கள் உரிமை உடன்படிக்கை மூலம் மருந்துப் பொருள் உற்பத்தி மற்றும் பாவனை சம்பந்தமாக நிலவும் சில வரையறைகளை தளர்த்தும் பொருட்டு குறித்த உடன்படிக்கையை திருத்துவதற்கு உலக வர்த்தக அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உத்தேச திருத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் கடும் தொற்றுநோய்கள், இயற்கை அனர்த்தங்கள் அல்லது அத்தகைய அவசர நிலைமைகளின் போது உலகம் முழுவதிலுமுள்ள எவரேனும் போட்டிகரமான வழங்குநர் ஒருவரிடமிருந்து ஆக்கவுரிமை கொண்ட விலைகூடிய மருந்து பெயரிலேயே பெற்றுக் கொள்ளும் சாத்தியம் கிடைப்பததோடு, இது மருந்து உற்பத்தியில் வரையறைகளுடன் கூடிய நாடொன்றான இலங்கைக்கு கூடுதலாக பயன்தரும். இதற்கமைவாக, உரிய திருத்த வரைவு உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.