• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய எரிசக்திப் பாதுகாப்பும் வினைத்திறன் மிக்கப் பாவனையும் தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டம் - அரசாங்க நிறுவனங்கள் இணங்கியொழுகப்பட வேண்டிய எரிசக்திப் பாதுகாப்பு முறைகள்

- நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் இறக்குமதி செய்யும் போது தேசிய ஏற்றுமதி வருமானத்திலிருந்து அண்ணளவாக சுமார் 30 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்ய நேரிடுகின்றது. அதேபோன்று பொதுமக்களுக்கு வழங்கப்படும் மின்சாரமானது சுமார் 25 சதவீதம் வினைத்திறனற்ற பாவனையினால் விரயமாகின்றமையும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஆதலால், எரிசக்தியின் பாதுகாப்பும் வினைத்திறன் மிக்க பாவனையும் முக்கியமானதாகும். இதற்கமைவாக, தேசிய எரிசக்திப் பாதுகாப்பும் வினைத்திறன் மிக்கப் பாவனையும் தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாக அரசாங்க நிறுவனங்களில் எரிசக்திப் பாதுகாப்பினையும் வினைத்திறமை மிக்க பாவனையையைும் மேம்படுத்துவதற்கும் அரசாங்க அலுவலகங்களிலுள்ள பதவியினர்களை இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் இணைத்துக் கொண்டு சகல நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை 10 சதவீதத்தால் குறைத்துக் கொள்ளும் நோக்குடனும் சகல அரசாங்க நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்காக மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.