• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப சட்டத்தின் கீழ் அமைச்சுகளுக்கு இடையிலான குழுவினைத் தாபித்தல்

- அண்மைக் காலத்தில் இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பத் துறையில் துரித முன்னேற்றத்தினை அடைந்துள்ளதோடு, உலக பொருளதார அமைப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட 2015 உலகளாவிய தகவல் தொழினுட்ப அறிக்கைக்கு அமைவாக 143 நாடுகளில் "ஆயத்தநிலை வலையமைப்பு சுட்டெண்" (Networked Readiness Index) என்பதில் 65 ஆவது இடத்திலும் தெற்காசிய நாடுகளில் முதலாவது இடத்திற்கும் வந்துள்ளது. இந்த நிலைமையை மேலும் விருத்தி செய்து கொள்வதற்கும் முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதற்கும் தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப துறைசார்ந்த திறமுறைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முகவராண்மைகளுக்கிடையில் உயர் கூட்டிணைப்பினைப் பேணுவதற்கும் மேற்போந்த சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுகளுக்கிடையிலான குழு, உரிய அமைச்சர்கள், இந்தத் துறையில் ஊக்கமுள்ள ஏனைய தரப்பினர்கள் ஆகியோர்களினது பங்களிப்புடன் மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.