• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விவாகப் பதிவு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்

- வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் உத்தேச விவாகப் பதிவுக் கட்டணத்தை 5,000/- ரூபாவிலிருந்து 1,000/- ரூபா வரை குறைப்பதற்கான திருத்தம் 2015‑03‑16 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும். இந்த நோக்கத்திற்காக விவாக பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.