• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி புதிய மகப்பேற்று வைத்தியசாலை நிருமாணிப்புக் கருத்திட்டம்

- 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர், ஜேர்மன் ஹெல்மட் கோல் மன்றத்தினால் இலங்கையில் காலி நகரத்திற்கு அண்மையில் புதிய மகற்பேற்று வைத்தியசாலையொன்றை நிருமாணிக்கும் மேற்போந்த கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு, பல்வேறுபட்ட காரணங்களினால் 2008 ஆம் ஆண்டிலிருந்து அதன் நிருமாணிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுக்கு குறித்த வைத்தியசாலையின் சேவைகளை தாமதமின்றி வழங்கும் தேவை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த கருத்திட்டத்தின் மீதி வேலைகளுக்குரிய ஒப்பந்தத்தை ஆகக் குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள கேள்விதாரருக்கு வழங்கும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.