• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரச / பகுதி அரச / தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் பல்வேறுபட்ட முகவர் சேவைகளை நடைமுறைப் படுத்தல்

- 200 வருடங்களுக்கு மேலாக பழைமை வாய்ந்த இலங்கை அஞ்சல் திணைக்களம் ஏற்கனவே நவீன தொழினுட்பத்தையும் புதிய விற்பனை நோக்கங்களையும் பயன்படுத்தி மாறுபடும் நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்றவாறு தரம்மிக்க வினைத்திறனுடனான சேவையினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் போது இந்த திணைக்களத்தின் சேவைகள் அதேபோன்று பல்வேறுபட்ட அரச / பகுதி அரச / தனியார் துறைகளுக்கு முகவர் சேவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் வியாபித்துள்ள 4,063 தபால் அலுவலகங்களைக் கொண்ட பலம்மிக்க வலையமைப்பொன்று இந்த திணைக்களத்திற்கு உள்ளதோடு, இவற்றுள் 653 தாபல் அலுவலகங்களுக்கு நவீன தொழினுட்ப வசதிகளை வழங்கி வலையமைப்பு பணிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. தபால் திணைக்களத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள தகவல் தொழினுட்ப மென்பொருட்களை பயன்படுத்தி, இந்த திணைக்களத்திற்கு மேலதிக நிதிப் பளுவினை ஏற்க நேரிடாத வர்த்தக சேவைகளை துரிதமாகவும் வெளிப்படையாகவும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் அஞ்சல் அமைச்சர் மாண்புமிகு எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.