• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச உடன்படிக்கைகளின் போது மின்னணு தொடர்பாடல் பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகள் நியதிச்சட்டத்தை உறுதிப்படுத்துதல்

- ​மேற்போந்த சமவாயமானது சருவதேச வர்த்தக சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த சமவாயத்தின் நோக்கமாவது சருவதேச உடன்படிக்கைகளுக்குரிய தொடர்பாடல்களின் போது மின்னணு பாவனை சம்பந்தமாக எழும் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகளை வழங்குதலாகும். இலங்கை 2006 ஆம் ஆண்டில் இந்த சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளதோடு, 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டம் தயாரிக்கப்படும் போதும் மேற்போந்த சமவாயத்திலுள்ள அம்சங்களும் மூலதர்மங்களும் இந்த சட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இதற்கமைவாக, மேற்போந்த சமவாயத்திற்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்கும் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தை மீளாய்வு செய்து, இந்த சமவாயத்தின் கீழான பொறுப்புகளை நிறைவு செய்யும் பொருட்டு தேவைப்படும் திருத்தங்கள் பற்றிய சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு தகவல் தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மைக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.