• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தேசிய மலர்

- பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கல்விமான்களையும் உத்தியோகத்தர்களையும் கொண்ட குழுவொன்றினால் வழங்கப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் "நீலோத்பலம்" இலங்கையின் தேசிய மலராக 1986 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய மலரினை காட்சிப்படுத்தும் சில சந்தர்ப்பங்களில் சரியான நீலோத்பல மலரினை காட்சிப்படுத்தாமையினால் அண்மைக்காலமாக எழுந்துள்ள முரண்பாடுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கையின் தேசிய மலரை சிங்கள மொழியில் "මානෙල්" எனவும் தமிழ் மொழியில் "நீலோத்பலம்" எனவும் ஆங்கில மொழியில் "Blue Water Lily” எனவும் அழைக்கப்படுவதற்கும் தேசிய மலர் பற்றி குறிப்பிடும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்குரிய சரியான படத்தையும் சரியான தாவரப் பெயரான "Nymphaea nouchali Burm.f” என்பதை பயன்படுத்துவதற்கும் தேசிய மலரின் சரியான பெயர் மற்றும் படம் தொடர்பில் போதுமான விளம்பரம் வழங்கி அதுபற்றி உரிய அரச நிறுவனங்களுக்கு அறியச் செய்விப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.