• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்குதல் - 2015

- திரவப்பால் பாவனையை அதிகரித்தல், பால் விவசாயிகளை ஊக்குவித்தல், உள்நாட்டு உணவு முறைகளை பழக்கப்படுத்திக் கொள்ளல் முதலியனவற்றை நோக்காகக் கொண்டு மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறை ரீதியில் செயற்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு பால் பெக்கட் வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட மில்கோ (பிறை​வேட்) கம்பனி ஊடாக நடைமுறைப் படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் புதிய வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக லீற்றர் ஒன்றின் பெறுகை விலை 70/- ரூபா வரை அதிகரித்தமை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கல்வி அமைச்சுக்கும் சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சுக்கும் வரையறுக்கப்பட்ட மில்கோ (பிறை​வேட்) கம்பனிக்கும் இடையிலான முற்தரப்பு உடன்படிக்கையின் பிரகாரம் 150 மில்லி லீட்டர் பால் பெக்கட் ஒன்றை 20/- ரூபாவைக் கொண்ட திருத்தியமைக்கப்பட்ட விலையின் கீழ் வரையறுக்கப்பட்ட மில்கோ (பிறை​வேட்) கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்து மேற்போந்த கருத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.