• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Glyphosate களைக்கொல்லி இறக்குமதி மற்றும் பாவனையை மட்டுப்படுத்துதல்

- நாடு முழுவதும் நீண்டகால சிறுநீரக நோய் உருவாவதற்கு இரசாயன பசளை, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றின் பாவனை காரணமாக அமையலாமென இதுதொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கமைவாக, இனங்காணப்பட்ட இரசாயனப் பசளை மற்றும் 4 வகைக் களைக்கொல்லிகளின் இறக்குமதியையும் பாவனையையும் ஏற்கனவே அரசாங்கம் முற்றுமுழுதாக தடைசெய்துள்ளது. இதற்கு மேலதிகமாக Glyphosate களைக்கொல்லி இறக்குமதியை முற்றாக தடை செய்யும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அவ்வாறே நடைமுறைப் படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.