• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஏப்ரல் மாதம் 15 - 18 காலப் பகுதியில் வொசிங்டன் நகரத்தில் நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் / சருவதேச நிதி நிதியத்தின் பருவகால கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சர் கலந்து கொண்டமை

- மேற்போந்த கூட்டத்திற்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சரின் தலைமைத்துவத்தில் தூதுக்குழுவொன்று கலந்துகொண்டுள்ளதோடு, இந்த விஜயத்தின் போது நிதி அமைச்சர் உத்தியோகபூர்வ மட்ட கலந்துரையாடல்கள் பலவற்றிலும் அதேபோன்று இருபக்க கூட்டங்கள் பலவற்றிலும் கலந்துகொண்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொண்டது. உலக பொருளாதார சாவால்களை வெற்றிக் கொள்வதற்கு இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதோடு, உலக சந்தையில் எண்ணெய் விலையில் நிகழ்ந்த வீழ்ச்சி உலக பொருளாதாரத்திற்கு சார்பான பாதிப்பினை உருவாக்கினாலும் கூட உலக பொருளாதாரம் இன்னமும் அவதானம் மிக்க நிலைமையில் உள்ளமை பற்றி அங்கு எடுத்துக் காட்டப்பட்டது. மேற்போந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒருங்கிணைவாக அமெரிக்க அரசாங்க திணைக்களத்தின் உத்தியோகத்தர்களையும் மலேசியா, யப்பான், சவுதி அரேபியா, கட்டார் இராச்சியம், இந்தியா போன்ற நாடுகளின் மாண்புமிகு நிதி அமைச்சர்களையும் உலக வங்கியினதும் சருவதேச நிதி நிதியத்தினதும் உயர்மட்ட உத்தியோகத்தர்களையும் சந்தித்து நிதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார அபிவிருத்தி, வர்த்தக சூழல் தொடர்பில் அவர் அமெரிக்க வர்த்தக சபையின் முன் விடயத் தெளிவுப்படுத்துகையை செய்துள்ளமை பற்றியும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.