• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன் சிறுவர்பராய அபிருத்திக் கருத்திட்டத்திற்கு கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்

- முன் சிறுவர்பராய குழந்தைகளின் நலனின் பொருட்டு மேலதிகமாக நிதி முதலீடு செய்யும் முக்கியத்துவம் அரசின் அபிருத்தி திறமுறையில் இனங்காணப்பட்டுள்ளதோடு, அதற்கமைவாக முறையான போசாக்கு, பாதுகாப்பு, சிறுவர்பராய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அணுகுமுறை உட்பட வழங்கப்படும் சேவைகளின் தரம் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் 0-5 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பானதும் பொருத்தமானதுமான சூழலை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை எய்தும் பொருட்டு "முன் சிறுவர்பராய அபிவிருத்திக் கருத்திட்டம் 2015 - 2020” முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான நிதி பங்களிப்பினை வழங்குவதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயம் விருப்பம் தெரிவித்துள்ளதோடு, இதற்கமைவாக இந்த நிறுவனத்துடன் இணக்கப்பேச்சு நடாத்துவதற்கும் 50 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு சமமான விசேட எடுத்தல் உரிமை கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த நிறுவனத்துடன் நிதி உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.