• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சிறுநீரக நிதியத்தை தாபித்தல்

- துரிதமாக பரவிவரும் நீண்டகால சிறுநீரக நோய் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தற்போது சிறுநீரக நோய் தடுப்பு மேற்பார்வைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழ் உரிய உபகுழுக்களும் தாபிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான முழு செயற்பாடும் சனாதிபதி அலுவலகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் தடுப்பு ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் கூட்டிணைக்கப்படுகின்றன. இந்த நோய் பரவுவதை தடுப்பதற்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக ஊக்கமுள்ள தேசிய மற்றும் சருவதேச சிவில் அமைப்புகளையும் ஆட்களையும் கொண்ட பல்வேறுபட்ட தரப்பினர்களினால் உத்தேச நிதியத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை அதற்காக 7 மில்லியன் ரூபா பங்களிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் மூலம் பிரேரிக்கப்பட்ட தேசிய சிறுநீரக நிதியத்தை சனாதிபதி செயலகத்தின் கீழ் தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.