• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015/2016 ஆண்டிற்கான திரிபோஷா உற்பத்தியின் பொருட்டு 500 மெ.தொ முழு ஆடை பால்மா பெற்றுக் கொள்ளல்

- திரிபோஷா போசாக்கின்மையால் வாடும் பிள்ளைகளுக்கு, போசாக்கு பிரச்சினையுள்ள கர்ப்பிணிதாய்மார்களுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு திரிபோஷா தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் போசாக்குள்ள உணவொன்றாகும். இந்த திரிபோஷா உற்பத்திக்கு வருடாந்தம் 500 மெ.தொ. முழு ஆடைப்பால்மா தேவைப்படுகின்றது. 2015/2016 ஆண்டிற்கான திரிபோஷா உற்பத்தியின் பொருட்டு 500 மெ.தொ முழு ஆடை பால்மா மில்க்கோ (பிறைவேட்) கம்பனியிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.