• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை துரிதமாக நீக்கிக் கொள்வதற்காக கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி திணைக்களத்தைப் பலப்படுத்தும் கருத்திட்டம்

- ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2014 நவெம்பர் மாதத்தில் இலங்கையின் மீன் உற்பத்தி இறக்குமதியை இடைநிறுத்தியதன் காரணமாக இலங்கைக்கு சுமார் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட சந்தைவாய்ப்பு இல்லாமற்போனது. இந்த தடையை நீக்குவதற்குத் தேவையான அடிப்படை சட்டக்கட்டமைப்பைத் தயாரித்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆற்றலைப் பலப்படுத்தல், தரப்பினர்களைப் பயிற்றுவித்தல், அறிவூட்டுதல், கப்பல் கண்காணிப்பு முறைமைகளைத் தாபித்தல் போன்ற அடிப்படை பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி திணைக்களத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.