• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவ சிப்பாய்களின் கற்றல் வாய்ப்புகளை அதிகரித்தல்

- தொழில்சார் மற்றும் கல்விசார் ஆற்றல் கொண்ட படைக்கலம் தாங்கிய சேவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் ஊடாக பல்வேறுபட்ட துறைகளுக்குரிய பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி மாணவ சிப்பாய்களுக்கு / மாணவர்களுக்குத் தேவையான உயர்கல்வித் தேவைகளை பூர்த்தி செய்கின்றது. இதன் மூலம் ஆபிரிக்க மற்றும் ஆசியவலய நாடுகளுக்கிடையில் நட்புறவை பலப்படுத்துவதற்காக அந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுப்பனவுகள் எதுவுமற்ற அடிப்படையில் கற்பதற்கான இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் முன்னாள் சனாதிபதி அதிமேதகைய ஹமீட் கர்சாயி அவர்களினால் 2014 ஆம் ஆண்டில் அவருடைய இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது செய்யப்பட்ட கோரிக்கை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இந்நாட்டிற்கு மேலும் இரண்டு (02) புலமை பரிசில்களை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.