• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம்

- 335 உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்போது செயற்படும் 234 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் 2015‑05‑15 ஆம் திகதியன்றும் 65 நிறுவனங்களின் பதவிக்காலம் 2015‑07‑31 ஆம் திகதியன்றும் 21 நிறுவனங்களின் பதவிக்காலம் 2015‑10‑16 ஆம் திகதியன்றும் 02 நிறுவனங்களின் பதவிக்காலம் 2015‑10‑31 ஆம் திகதியன்றும் முடிவடையவுள்ளன. இந்த நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படும் மாநகர கட்டளைச்சட்டம், நகர சபை கட்டளைச்சட்டம், பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் ஏற்புபடைத்தானவாறு அவற்றின் பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ சாத்தியம் நிலவுகின்றது ஆயினும், எதிர்காலத்தில் தொகுதிமுறையை அடிப்படையாகக் கொண்ட கலப்பு தேர்தல் முறையொன்றின் கீழ் தேர்தலொன்றை நடாத்தி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் ஆற்றல் உள்ளமையினால் உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலத்தை மீண்டும் நீடிக்காமல் அந்த நிறுவனங்களின் பதவிக்காலங்கள் முடிவுறுவதற்கு இடமளிப்பது பற்றி அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.