• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு நகர போக்குவரத்து அபிவிருத்தி கருத்திட்டத்தின் நகர அபிவிருத்தி கூறின் கீழ் பல்கூறு நிலையமொன்றை மாக்கும்புற நகரத்தில் நிருமாணித்தல்

- பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேடமாக பஸ் மற்றும் புகையிரதங்களை இணைக்கும் போக்குவரத்து கேந்திர நிலையமொனறாக மாக்கும்புற புதிய நகர அபிவருத்தியானது நகர அபிவிருத்தி அதிகாரசபையினாலும் உள்ளக போக்குவரத்து அமைச்சினாலும் இனங்காணப்பட்டுள்ளது. இதன் கீழ் பஸ்கள் நிறுத்துமிடமொன்று, புகையிரத நிலையமொன்று, பஸ் / கார் வாடகை வாகன நிறுத்துமிடமொன்று உட்பட உரிய வீதி முறைமை போன்றவை நிருமாணிக்கப்படவுள்ளன. யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியின் மீது மேற்கொள்ளப்படும் மாகும்புற பல்கூறு போக்குவரத்து நிலையத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.