• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பின்னவல மிருகக்காட்சிசாலையில் சிறிய பாலூட்டி விலங்கினங்களின் இனப்பெருக்க நிலையமொன்றையும் பல்வகைமை பூங்காவொன்றையும் உருவாக்குதல்

- அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பின்னவல புதிய மிருகக்காட்சிசாலைக்கு நாளுக்கு நாள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக் கிடையில் பெருமளவில் பிரபல்யம் அடைந்து வருகின்றது. பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சிசாலையானது திறந்த வெ ளிகளில் மிருகங்களை வைத்திருக்கும் பிரதேசமொன்றாக நிருமாணிக்கப்பட்டுள்ளதோடு, இது இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கும் கூட புது அனுபவமுமாகும். இலங்கையில் உள்நாட்டு மிருகங்களை பாதுகாக்கும் நோக்கில் பின்னவல மிருககாட்சிசாலையில் சிறிய பாலூட்டி விலங்கினங்களின் இனப்பெருக்க நிலையமொன்றையும் பல்வகைமை பூங்காவொன்றையும் உருவாக்கும் பொருட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.