• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச சமுத்திர அமைப்பின் நியதிச்சட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையானவாறு 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிக கப்பற் சட்டத்தைத் திருத்துதல்

- ஐக்கிய நாடுகள் தனது உறுப்பு நாடுகளின் அனைத்து கப்பற் பணிகள் தொடர்பிலுமான அதிகாரங்களை கையளித்துள்ள சருவதேச சமுத்திர அமைப்பினால் கட்டாய நியதிச்சட்டமாக விதிக்கப்பட்டுள்ள மிக முக்கிய சருவதேச நியதிச்சட்டங்களுக்கு அமைவாக அதன் உறுப்பு நாடுகள் செயலாற்றுதல் வேண்டும். இதற்கமைவாக சருவதேச சமுத்திர அமைப்பின் நியதிச்சட்டங்களை வெற்றிக்கரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு இலங்கையின் வணிக கப்பற் பணிகள் உட்பட அதனோடு இணைந்த சகல பணிகளையும் ஒழுங்குறுத்தும் 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிக கப்பற் சட்டத்தைத் திருத்துவதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.