• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மாகாணத்திற்கான வன தாழ்வாரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் சரணாலயங்கள் என்பவற்றை பிரகடனப்படுத்தல்

- முப்பது வருடகாலமாக நிலவிய யுத்தம் முடிவடைந்து சமாதானம் உருவானதுடன் வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் அதேபோன்று சுற்றால் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தக் கூடிய பிரதேசங்களை கண்டறியும் நோக்கில் சுமார் 25 அரசாங்க நிறுவனங்களின் பங்களிப்புடன் கூட்டு திறமுறை சுற்றாடல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் தலைமை தாங்கியதோடு, தேவையான நிதி மற்றும் தொழினுட்ப வசதிகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமும் ஐக்கிய நாடுகளுக்கான சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டமும் வழங்கியிருந்தன. இந்த மதிப்பீட்டின் கீழ் யானை மனித மோதல்களை குறைத்தல், ஈரவலய பாதுகாப்பு, புலம்பெயர் பறவைகளினது பிரதேச பாதுகாப்பு, உயிரின பல் வகைமை பாதுகாப்பு, சுற்றாடல், சுற்றுலா மேம்பாடு போன்ற நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வனவுயிர் ஒதுக்கங்களாக பிரகடனப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களும் தற்போதுள்ள ஒதுக்கங்களின் தரம் மேம்படுத்தப்பட வேண்டிய ஒதுக்கங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கமைவாக இனங் காணப்பட்ட வன தாழ்வாரங்கள், புதிய இயற்கை வளங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை பிரகடனப்படுத்துவதற்கும் தற்போதுள்ள சரணாலயங்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் சரணாலயங்களின் எல்லைகளின் திருத்தத்திற்காக புதிய எல்லை அட்டவணைகளைத் தயாரிப்பதற்கும் அவற்றை வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்துவதற்கும் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.