• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் நடவடிக்கைகளின் போது பரஸ்பரம் சட்ட ஒத்துழைப்பினை வழங்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை

- சருவதேச மட்டத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பதற்காக குற்றவியல் நடவடிக்கைகளின் போது சருவதேச பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைகளின் போது பரஸ்பர ஒத்துழைப்பு நல்கும் சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் நிகழும் குற்றவியல் நடவடிக்கைகளின் போது இலங்கை வெளிநாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இலங்கையினால் அந்த நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புலனாய்வுகளை மேற்கொள்தல், வழக்கு தொடுத்தல், குற்ற நடவடிக்கைகளின் மூலம் ஈட்டிய பணத்தினை அரசுடமையாக்குதல் தொடர்பில் இருநாடுகளினதும் சட்டங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையிலான மேற்போந்த உடன்படிக்கையைச் செயது கொள்வதற்கும் அதற்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்ப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.