• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய உள்நாட்டு நெல் அறுவடையைக் கொள்வனவு செய்தல்

- தொற்றுநோய் அல்லாத நோய்கள் பரவுதல் அத்துடன் வருடாந்தம் மரணிக்கும் ஆட்களில் கூடுதலானோர் தொற்றுநோய் அல்லாத நோய் காரணமாக மரணிக்கும் சந்தர்ப்பம் நாட்டில் காணக்கிடைக்கின்றது. பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைகளிலிருந்து விலகி கம இரசாயனங்களை பயன்படுத்தி நவீன பயிர் செய்கைகளுக்கு ஆளானமையும் பாரம்பரிய உணவு பயிர்களிருந்தும் உணவு பழக்கத்திலிருந்து விலகியமையும் தொற்றுநோய் அலலாத நோய்களுக்கு ஆளாவதற்கான காரணங்களாகுமென உள்நாட்டு வெளிநாட்டு விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு மாற்று வழியாக மக்களிடத்தில் அருகிவரும் பாரம்பரிய உணவு பழக்க வழங்கங்களுக்கு மக்களை மீள பழக்கும் நோக்கினைக் கொண்டு பாரம்பரிய உள்நாட்டு நெல் அறுவடையிலிருந்து கிலோகிராம் 25 இலட்சம் 80/- ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்கும் இதிலிருந்து ஒரு பகுதி கிலோ ஒன்று 90/- ரூபா வீதம் ஒருவருக்கு வழங்கப்படும் உச்ச அளவாக 25 கிலோகிராமாக அமையும் விதத்தில் சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளித்து விதை நெல் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கும் மீதித் தொகையை அரிசியாக மாற்றி சந்தையில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.