• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 / 2015 பெரும்போக நெல் கொள்வனவு

- 2015 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதியிலிருந்து இதுவரையிலான காலப்பகுதிக்குள் உணவு பாதுகாப்பு அமைச்சினால் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக கமக்காரர்களிடமிருந்து நேரடியாகவும் அதேபோன்று கமநல அமைப்புகள் ஊடாகவும் 148,973 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு, இதற்காக பொதுத்திறைசேரியினால் 7,200 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதெனவும் இது 2007 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அரசாங்கத்தின் தலையீட்டின் மீது கொள்வனவு செய்யப்பட்ட ஆகக்கூடிய நெற்தொகையெனவும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.