• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடைமுறையிலுள்ள தேர்தல் முறையை திருத்தும் பொருட்டிலான உத்தேச சட்டத்திருத்தம்

- கடந்த சனாதிபதி தேர்தலில் தெரிவிக்கப்பட்ட மக்கள் கருத்து, அரசியல் கட்சிகளின் பொதுக் கோரிக்கை என்பவற்றுக்கு அமைவாக நடைமுறையிலுள்ள விருப்பு வாக்குமுறையை இலங்கை தேர்தல் முறையிலிருந்து நீக்கி சகல தேர்தல் பிரிவு அல்லது தொகுதி சார்பில் நேரடியாக உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யும் விதத்திலும் அந்தந்த கட்சிகளினால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையின் விகிதாசாரத்திற்கு அமைவாகவும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் விதத்திலும் (தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு) வரைவு பிரேரிப்பொன்று அதிமேதகைய சனாதிபதியினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரைவு பிரேரிப்பை அடிப்படையாகக் கொண்டு சகல தரப்பினர்களினதும் கருத்துகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், புதிய தேர்தல் முறையொன்றுக்கான சட்ட திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.