• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டம் (கட்டம் III) - கெரவலபிட்டியவிலிருந்து கடவத்தை (9.32 கி.மீ) வரையிலான சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் III ஆம் கட்டத்திற்கான வேலைகளை ஆரம்பித்தல்

- வெளிச்சுற்றுவட்ட நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் III ஆம் கட்டம் கெரவலப்பிட்டியவில் ஆரம்பித்து கடவத்தையில் முடிவடைவதோடு,அதன் நீளம் 9.32 கிலோ மீற்றர்களாகும். இந்த கட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட சிவில் வேலை ஒப்பந்தம் 66,689 மில்லி்யன் ரூபா ஆவதோடு, இதில் 95 சதவீதம் சீனாவின் எக்ஷிம் வங்கியின் கடன் மூலம் வழங்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கும் பணிகள் ஏற்கனவே முடிவடையும் நிலையில் உள்ளதோடு, இதற்கான நட்டஈடாக தற்போது செலுத்த வேண்டியதொகையானது 1,100 மில்லியன் ரூபாவாகும். இந்த கருத்திட்டத்தின் தொழினுட்ப மற்றும் நிதி விடயங்களை மதிப்பிடும் பொருட்டு நியமிக்கப்பட் மீளாய்வுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு திருத்தப்பட்ட வேலை விடயநோக்கெல்லையின் கீழ் மேற்போந்த கருத்திட்டத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்காக நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.